கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
சினிமாவில் மட்டும் தான் நடிப்போம் என்று சொல்கிற பேச்சுக்கே மலையாள நட்சத்திரங்களிடம் வேலையில்லை. முகேஷ் தனது மனைவியுடன் இணைந்து இரண்டு மணி நேரம் மேடை நாடகம் நடத்தவிருக்கிறார். அதற்கு சூப்பர்ஸ்டார் மோகன்லால் கதைசொல்லியாக பின்னணி குரல் கொடுக்கிறார். லேட்டஸ்ட் தகவலாக, மறைந்த பிரபல மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான பத்மராஜன் எழுதிய நாடகத்தில் சுரேஷ்கோபியும் ஜெயராமும் பங்கேற்கிறார்கள். ஆனால் இது மேடை நாடகம் அல்ல.. ரேடியோவில் ஒலிபரப்பாகும் நாடகம்.
பத்மராஜன் 1968ல் எழுதிய 'அகலே அகலே ஆஸ்வாசம்' என்கிற கதையைத்தான் நாடகமாக்கி இருக்கிறார்கள். இதில் கதாநாயகன் பாத்திரமாக ஜெயராமும், அவரது தந்தையாக நெடுமுடி வேணுவும், டாக்டராக சுரேஷ்கோபியும் அவரது மனைவியாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பாக்யலட்சுமியும் குரல் கொடுத்து நடிக்க இருக்கிறார்கள்.
பத்மராஜன் இயக்கிய 'அபரன்' படத்தில் தான் ஜெயராம் அறிமுகமானார். அவர் இயக்கிய 'இன்னலே' படத்தில் தான் சுரேஷ்கோபியும், ஜெயராமும் முதன்முதலாக இணைந்து நடித்தார்கள். அதனால் தான் ரேடியோ நாடகம் என்றாலும் பத்மராஜன் கதை என்பதால் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே ஒப்புக்கொண்டுவிட்டார்கள். வரும் ஆகஸ்ட்-2ஆம் தேதி ஆல் இந்திய ரேடியோவில் இந்த நாடகம் ஒலிபரப்பாகிறது.