கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
'பருத்தி வீரன்' படத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருது பெற்ற பின்னும் தமிழ்த் திரையுலகம் தனக்கு சரியான வாய்ப்புத் தரவில்லை என்பது பற்றி பிரியாமணி எந்த விதமான கவலையும் படவில்லை. தமிழைத் தவிர, கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமா பிரியாமணியை புறக்கணித்துவிட்டதில் வருத்தம் இல்லையா என்ற ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “நான் ஏன் வருத்தப்பட வேண்டும், நான் காத்திக்கிட்டிருக்கலாம் தயாராயில்லை, மற்ற மொழிப் படங்களில் வாய்ப்பு வர, அதைப் பயன்படுத்தி வருகிறேன். என்னைத் தமிழ்ப் படங்களில் நடிக்க வைக்காதது பற்றி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்தான் யோசிக்க வேண்டும். அதற்காக பிடிக்காத படங்களில் நடிக்கவும் எனக்கு விருப்பமில்லை,” என்று சொல்லியிருக்கிறார்.
தமிழ்த் திரையுலகினர் தனக்கு வாய்ப்பு கொடுக்காததன் விரக்திதான் பிரியாமணியை இப்படி பேச வைத்திருக்கிறது போலும்.