கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
படத்தின் கதைக்கும், தலைப்புக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற நியதியை தமிழ்ப்பட இயக்குநர்கள் மறந்து அரை சதம் ஆண்டுகளாகவிட்டன. கதைக்கு சம்மந்தமே இல்லாத தலைப்புகளைத்தான் பலரும் வைக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக அண்மைக்காலமாக இன்னொரு வகையான மனப்பான்மையும் இயக்குநர்கள் மத்தியில் நிலவுகிறது. ஜெயம் ரவி நடித்த அப்பாடக்கர் படத்துக்கு தற்போது சகலகலாவல்லவன் என்று பெயர் வைத்துள்ளனர். சகலகலாவல்லவன் என்பது பக்கா ஆக்ஷன் சப்ஜெக்ட்டுக்கான டைட்டில். ஜெயம்ரவி நடித்துள்ள படமோ பக்கா காமெடி படம்.
இதேபோல் இன்னொரு படத்துக்கும் ஏடாகூடமாக தலைப்பு வைத்துள்ளனர். டார்லிங் படத்தில் நடித்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் அடுத்து நடிக்கும் படம் நயன்தாரா இல்லனா த்ரிஷா. இப்படத்திற்குப் பிறகு நடிக்க உள்ள படத்துக்கு பாஷா என்கிற ஆன்டனி என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த டைட்டிலில் வரும் பாட்ஷா என்ற வார்த்தை ரஜினிகாந்த் நடித்த பட டைட்டில் என்பதால் பாஷா என்கிற ஆன்டனி என்று பெயர் வைப்பதற்கு சிக்கல் ஏற்பட்டது. எனவே இப்போது படத்திற்கு புரூஸ்லீ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
கெனன்யா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார். இப்படம் பக்கா காமெடி படம்.
புருஸ்லீயாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவனைப் பற்றிய கதையாம். கதைக்கு சம்மந்தமே இல்லாத தலைப்பை சூட்டுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தருவதோடு படத்தின் வெற்றியையும் பாதிக்கும் என்பதை ஏனோ இவர்கள் உணராமலே இருக்கிறார்கள்.