கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
தங்கமீன்கள் படத்தை இயக்கி நடித்த ராம் தற்போது தரமணி என் படத்தை இயக்கி வருகிறார். வசந்தபவன் ஓட்டல் அதிபர் ரவி தயாரிக்கும் இப்படத்தில் அவரது மகன் வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கிறார். ஆன்ட்ரியா கதாநாயகியாக நடிக்கும் தரமணி படம் தொடங்கப்பட்டு பல மாதங்களாகிவிட்டநிலையில் கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. தரமணி படத்துக்கு கமர்ஷியல் வேல்யூவை கூட்டுவதற்காக இப்படத்தில் அஞ்சலியை ஒரு காட்சியில் தலைகாட்ட வைத்து கேமியோ கேரக்டர் ஒன்றில் நடிக்க வைத்துள்ளார் ராம்!
ராம் இயக்கத்தில் 'கற்றது தமிழ்' படத்தில்தான் நடிகையாக அறிமுகமானார் அஞ்சலி. அதன் பிறகு அஞ்சலியின் ஸ்டேட்டஸ் உயர்ந்துவிட்டது. ராம் மட்டும் கஷ்டநிலையிலேயே இருந்தார். தற்போது வசந்த் ரவி நடிப்பில் 'தரமணி' என்ற படத்தை இயக்கி வரும் ராம், அண்மையில் அஞ்சலியை சந்தித்து தன் படத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டாராம். எனவேதான் மீண்டும் ராம் இயக்கத்தில் நடிக்கிறார் அஞ்சலி. அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. தரமணி படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார் என்றும் தகவல் அடிபடுகிறது.