கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
ஒரு படத்தை பற்றி ஒவ்வொருத்தருக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கலாம். மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தை இளைஞர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள், படம் வசூலை அள்ளி கொட்டுகிறது என்றால் நிச்சயம் அனைத்து தரப்பையும் கவரக்கூடிய விஷயம் இருக்கவே செய்யும். ஆனால் நேற்று பிரபல மலையாள இயக்குனர் கமல், 'பிரேமம் படம் இளைஞர்களுக்கு தவறான பாதையை காட்டுகிறது என குற்றம் சாட்டினார். மாணவர்கள் மது அருந்திவிட்டு வகுப்ப்பிற்கு வருவதையும், கல்லூரி மாணவன் லெக்சரரை காதலிப்பதையும் காட்டுவதாக அதற்கு காரணம் சொல்லியிருந்தார்.
ஆனால் மென்மையான காதலையும், அழகான குடும்பம் சார்ந்த உறவுகளையும் படமாக எடுத்து, மலையாளத்தில் மட்டுமல்லாமல் அன்றைய தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்த பிரபல இயக்குனர் பாசில், கமலின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்கள் குடித்துவிட்டு வகுப்பிற்கு வரும் காட்சிகளும், மாணவன் ஆசிரியையை காதலிப்பது போன்ற காட்சிகளும் தவறானவை என்றால், இன்றைய இளைஞர்களுக்கு எப்படி படம் எடுப்பது என இயக்குனர் கமல் அறிவுரை சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். மேலும் பிரேமம் படம் ஆன்லைனில் லீக்கான விவகாரத்தில் 'இதுதான் முதல் தடவையா நடக்குதா..? அதுதான் நட்டக்கணக்கை எல்லாம் தாண்டிருச்சே' என்று கூறிய கமலின் பொறுப்பற்ற பேச்சுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார் பாசில்.