கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவிற்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான டி.ராஜேந்தரும் தனது இரங்கலை, இரங்கற்பாவாக வெளியிட்டுள்ளார்.
கலாம் மறைவு குறித்து, டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள இரங்கற்பா இதோ....
இந்திய விஞ்ஞான உலகின் விருட்சம் ஒன்று
வேரறுந்து வீழ்ந்து விட்டது....
இளைஞர் சமுதாயத்துக்கு
வழிகாட்டிய ஒளி விளக்கொன்று
உடைந்து விட்டது...
அறிவு பெட்டகத்தை சுமந்த
அப்துல் கலாம் எனும்
அற்புதக் கலம் காலக்கடலில்
தன் பயணத்தை நிறுத்திவிட்டது...
நம்மையெல்லாம் கண்ணீர்
கடலில் ஆழ்த்திவிட்டது...
மேகாலயாவில் மாணவர்களிடையே
பேசும்போது...
மேல்வானின் கேக ஆலயா அவரை
அழைத்து விட்டது...
நம்மையெல்லாம்
சோக ஆலயாவில்..
நுழைத்துவிட்டது...
சொல்லால் வேண்டுமானால்
அவர் முன்னாள் ஜனாதிபதி...
செயலால் இந்தியர்கள்
இதயத்தில் என்றுமே
அவர் அழியா அதிபதி....
அவரது மறைவு இந்திய
நாட்டுக்கே ஈடு கட்ட முடியாத இழப்பு...
குடியரசு தலைவராய்
அவர் ஆற்றிய தொண்டு
நம் நெஞ்சை விட்டு நீங்காது
காலம் உள்ளவரை அவர்
புகழ் மங்காது..
என்று டி.ராஜேந்தர் தனது இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.