கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஹிரித்திக் ரோஷன். பல இளம் பெண்களின் கனவு நாயகனாக இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நடித்த 'கஹோனா பியார் ஹை, கபி குஷி கபி காம், கொய் மில் கயா, கிரிஷ், தூம் 2, ஜோதா அக்பர், குஜாரிஷ்,'' உள்ளிட்ட பல படங்களைப் பார்த்து அவர் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் அதிகம். பல நட்சத்திரங்களுக்கு அவர் கூட நடிப்பதென்றால் இன்னமும் கொள்ளைப் பிரியம்தான். இருந்தாலும் தென்னிந்திய நடிகைகளுக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இருந்தாலும் ஹிரித்திக்குடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதையே, மிகப் பெரும் பெருமையாக நினைத்திருக்கிறார் நடிகையும் இயக்குனர் விஜய்யின் மனைவியுமான அமலா பால்.
சமீபத்தில் மும்பையில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, ஒரு பார்ட்டியில் ஹிரித்திக்கைச் சந்தித்திருக்கிறார் அமலா பால். அப்போது அவருடன் ஒரு செல்ஃபியும் எடுத்துக் கொண்டிருக்கிறார். அது பற்றி அளவுக்கதிகமான மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். “கொய் மில் கயா' படம் வந்த போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போதிலிருந்தே நான் அவருடைய தீவிரமான ரசிகை. அவரைச் சந்தித்த போது நான் ஒரு ரசிகையாகவே மாறிவிட்டேன். அவர் என்னை அழைத்த போது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். அவருடன் எடுத்துள்ள செல்ஃபி புகைப்படத்தை ஒரு புதையல் போல பாதுகாப்பேன். என்னுடன் பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஹிரித்திக்கை சந்தித்த போது நானும் ஒரு ரசிகையாகத்தான் என்னை உணர்ந்தேன்,” என்கிறார் அமலா பால்.