கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
டோலிவுட்டின் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த "ஐஸ்க்ரிம்" படத்தில் நயாகியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை தேஜஸ்வி மடிவாடா. பல தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்த தேஜஸ்வி தற்போது விடுமுறையில் உள்ளார். லடாக்கிற்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ள தேஜஸ்வி பயணத்தின் போது தான் எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நண்பர்களுடன் சுற்றுலா செல்வது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக அமைந்துள்ளதாகவும் தேஜஸ்வி கூறியுள்ளார். தேஜஸ்வி டோலிவுட் பிரின்சஸ் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள ஸ்ரீமந்துடு படம் ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் கொரடலா சிவா இயக்கியுள்ள அப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.