சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் |
ராஜமௌலி இயக்கத்தில் வௌிவந்துள்ள இந்தியாவின் பிரம்மாண்ட படமான ''பாகுபலி'' தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ், இந்தி போன்ற மொழிகளிலும் வசூலை குவித்து கொண்டிருக்கிறது. பாலிவுட்டில் இருக்கும் பிரபலங்கள் எல்லாம் பாகுபலி படத்தை பார்த்து பிரமித்து போய் உள்ளனர். இந்நிலையில் பாகுபலி படத்தை பார்த்த நடிகர் அஜய் தேவ்கனுக்கும் படம் பிடித்து போய்விட்டது. உடனடியாக அவர் பிரபாஸை பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். இந்தநேரத்தில் டில்லி வந்திருந்த பிரபாஸூக்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. அதோடு மட்டுமல்லாது அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் தான் அவரும் இருந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக பாகுபலி பிரபாஸ் தனது பெற்றோருடன் சென்று அஜய்யை சந்தித்தார். சில நிமிடங்கள் அவருடன் தனது படங்கள் பற்றியும், அவரை பற்றியும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.