ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு நடிகைகள் படையெடுப்பது ஒன்றும் புதிய விசயமில்லை. என்றாலும், முன்பெல்லாம் கதாநாயகிகள்தான் அதிகமாக வந்து கொண்டிருந்தனர். ஆனால் பாபநாசம் படத்தின் மூலம் ஆஷாசரத் என்ற கேரக்டர் நடிகை தமிழுக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து இப்போது நைட் ஷோ என்ற படம் மூலம் அனுமோல் என்ற இன்னொரு மலையாள கேரக்டர் நடிகை தமிழுக்கு இறக்குமதியாகியிருக்கிறார்.
மலையாளத்தில் கடந்த 2013ம் ஆண்டு லால், ஸ்ரீனிவாசன் நடிப்பில் வெளியான படம் ஷட்டர். இந்த படத்தை ஜாய் மேதேவ் இயக்கியிருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் இப்போது அந்த படத்தை தமிழில் நைட்ஷோ என்ற பெயரில் இயக்குனர் விஜய் தயாரித்துள்ளார். எடிட்டர் ஆண்டனி இயக்கியிருக்கிறார்.
சத்யராஜ், யூகிசேது முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அனுமோல் என்ற மலையாள நடிகையும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் மலையாளத்தில் சிறந்த நடிகைக்கான விருது பெற்றவராம். ஆனபோதும், ஷட்டர் படத்தின் தமிழ் ரீமேக்கான நைட் ஷோ படத்தில் நடிக்க இவரை அழைத்தபோது அந்த கேரக்டர் பற்றி தெரியும் என்பதால் என்னால் ஸ்கோர் பண்ண முடியுமா என்று தயங்கினாராம். ஆனபோதும் உங்களால் முடியும் என்று சொல்லி நடிக்க வைத்தார்களாம்.