ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்க சிம்புதேவன் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள படம் புலி. இப் படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 2ம் தேதி சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் ஒரு தனியார் ரிசார்ட்டில் பிரம்மாண்டமான விழாவாக நடைபெற உள்ளது. விழாவிற்கு தமிழ்த் திரையுலகில் உள்ள சில முக்கிய நட்சத்திரங்கள் உட்பல பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவருமே இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
பொதுவாக, எந்த ஒரு தமிழ்ப் படத்தின் இசை வெளியீடும் சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலோ அல்லது ஏதாவது ஒரு திரையரங்கத்திலோதான் நடைபெறுவது வழக்கம். சென்னைக்கு அருகில் ஒரு ரிசார்ட்டில் மிகப் பிரம்மாண்டமாக ஒரு இசை விழா நடக்க இருப்பது இதுவே முதல் முறை. ஆனால், புலி படத்தைப் பொறுத்தவரையில் விஜய், ஸ்ரீதேவி உட்பட பலர் நடித்திருப்பதாலும், சரித்திரப் படம் என்பதாலும் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் அனைவரையும் பேச வைக்கும் விதத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது. விழா நடக்கும் மேடை உட்பட அனைத்திலும் புதுமைகளைப் புகுத்த திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் சிம்புதேவன். பாகுபலி படத்தைப் போல புலி படத்தையும் இந்தியா முழுவதும் பேச வைக்கும் விதத்தில் படத்தை முன்னெடுத்துச் செல்ல படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.