ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
யுடிவி தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் யட்சன். கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்தப் படம் முடிவடைந்து பல மாதங்களாகின்றன.
இதே யுடிவி நிறுவனம் தயாரித்த புறம்போக்கு படத்திலும் ஆர்யா நடித்திருந்தார். எனவே முதலில் புறம்போக்கு படத்தை வெளியிட்டுவிட்டு பிறகு யட்சன் படத்தை வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டு யுடிவி நிறுவனம் பட வேலைகளை மேற்கொண்டது. அதன்படி சில மாதங்களுக்கு முன் புறம்போக்கு படத்தை வெளியிட்டுவிட்டது.
அதையடுத்து யட்சன் படத்தை வெளியிடும் வேலைகளில் ஈடுபட்டபோது, யட்சன் படத்தை இப்போது வெளியிட வேண்டாம் என ஆர்யா தரப்பிலிருந்து யுடிவிக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. தான் தயாரிக்கும் வாசுவும் சரவணணும் ஒண்ணா படிச்சவங்க படம் முதலில் ரிலீஸ் ஆக வேண்டும். அதன் பிறகு யட்சன் படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று ஆர்யா கேட்டுக் கொண்டாராம். யுடிவி தனஞ்செயனுக்கு ஆர்யா நெருங்கிய நண்பர் என்பதால், அவரது வேண்டுகோளை ஏற்று யட்சன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டாராம் தனஞ்செயன். இதனால் யட்சன் படத்தின் இயக்குநரான விஷ்ணுவர்தன் ஆர்யா மீது செம கடுப்பாகிவிட்டாராம்.