Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆறு மணிக்கு மேல் 'ஆட்டம்' ஆடிய அஞ்சலி

27 ஜூலை, 2015 - 10:31 IST
எழுத்தின் அளவு:
Anjalis-dance-after-60-clock

தலைப்பைப் பார்த்து எதுவும் தப்பா புரிஞ்சிக்கக் கூடாது, அது ஒரு ரைமிங்குக்காக எழுதியது. அஞ்சலி போட்ட ஆட்டம் சமீபத்தில் வெளிவந்த வதந்தி சம்பந்தப்பட்டதும் அல்ல, அவர் ஆடிய ஆட்டம் கிரிக்கெட் ஆட்டம். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அஞ்சலி மீண்டும் நாயகியாக ரீ-என்ட்ரி ஆகியுள்ள படம் 'சகலகலா வல்வன்'. ஜெயம் ரவி ஜோடியாக அஞ்சலி, த்ரிஷா நடித்துள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் சுராஜ் அஞ்சலி ஆடிய ஆட்டம் பற்றி சுவையான தகவல் ஒன்றைத் தெரிவித்தார்.


“நான் எப்போதுமே படப்பிடிப்பை ஆறு மணிக்கு மேல வைக்க மாட்டேன். அஞ்சலி படப்பிடிப்புல இருக்கும் போதெல்லாம் ஆறு மணி ஆச்சின்னா போதும் ஆட்டம் போட ஆரம்பிச்சிடுவாங்க. அவங்களுக்கு கிரிக்கெட் ஆடத் தெரியுமோ தெரியாதா, அவங்களுக்கு பந்து போடறவங்களுக்கு போடத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் ஒன்பது மணி வரைக்கும் கிரிக்கெட் ஆடிக்கிட்டே இருப்பாங்க. சூரி உட்பட எல்லாருமே ஏம்மா காலையில ஷுட்டிங் போக வேணாம இப்படி ஆடிக்கிட்டிருந்தால் எப்படின்னு கேட்டாலும் நிறுத்த மாட்டாங்க. இப்படி சூரி கேக்கப் போயிதான் அவரோட ஐபோனை உடைச்சிட்டாங்க. அதுக்கப்புறம் அவங்க சூரியயை பார்க்கவே இல்லை. இப்ப சூரி கோல்கட்டாவுல அஜித் பட ஷுட்டிங்குல இருக்காரு, அஞ்சலி பிரஸ்மீட்டுக்கு வந்திருக்கா சார், என் போனுக்கு காசு கேட்டு வாங்கிக் கொடுங்கன்னு சொன்னாரு. இதை அஞ்சலி இருக்கிற மேடையிலயும் சொல்லிடறன்,” என்றார்.


பதிலுக்கு அஞ்சலி, 'சார் அவர் வேற புது போன் வாங்கணும்னு சொன்னாரு, அதான் பழசு எதுக்குன்னு அதை உடைச்சிட்டேன்,” என மேடையிலேயே பதிலளித்தார்.


'சகலகலா வல்லவன்' படத்தின் பாடல்களையும், டிரைலரையும் பார்த்தால் சகல ரசிகர்களுக்கும் பொருத்தமான படமாக இருக்கம் எனத் தோன்றுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in