ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் ராகுல் ப்ரீத்தி சிங் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜாவுடன் நடித்துள்ள கிக் 2 படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. தற்போது நடிகர் ஜூனியர் என்.டி.ஆருடன் நன்னுக்கு பிரேமதோ படத்திலும் நடிகர் ராம் சரணுடன் புரூஸ் லீ படத்திலும் நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங் அடுத்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை பொயப்படி ஸ்ரீனு இயக்குகின்றார்.
அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் ப்ரீத்தி சிங், தனது கனவு கதாபாத்திரமாக குயின் படத்தில் நாயகி கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஹிந்தியில் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளிவந்த குயின் படம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் கங்கனாவிற்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. அப்படத்தில் பெண்ணின் உணர்வுகளை மையப்படுத்திய கங்கனாவின் கதாபாத்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாக் கூறியுள்ள ராகுல் ப்ரீத்தி சிங் அது போன்ற வேடங்களில் நடிக்க தான் ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளார்.