ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் விஷாலும், சரத்குமார் மகள் நடிகை வரலட்சுமியும் தீவிரமாக காதலித்து வருவது சினிமா வட்டாரச் செய்தி. இருவருமே இதை மறுத்து "நாங்கள் நண்பர்கள்தான்" என்று கூறிவருகிறார்கள். தற்போது நடிகர் சங்க பிரச்சினையில் விஷால், வரட்சுமியின் தந்தை சரத்குமாரை கடுமையாக எதிர்த்து வருகிறார். வரலட்சுமி "என் ஆதரவு என் தந்தைக்கே" என்பதை டுவிட்டரில் தெரிவித்திருந்தார். நேற்று அதனை விஷாலை பக்கத்தில் வைத்துக் கொண்டே வெளிப்படையாக அறிவித்தார்.
கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் கொல்லப்படுவதை கண்டித்து இந்திய கால்நடைகள் மக்கள் இயக்கம் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள விஷாலும், வரலட்சுமியும் ஒரே காரில் வந்து இறங்கினார்கள்.
பின்னர் அங்கு நிருபர்களிடம் பேசிய விஷால் "நடிகர் சங்க பிரச்சினை தொடர்பாக முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளேன். அனுமதி கிடைத்ததும் சந்திப்பேன். திருச்சியில் நாடக நடிகர்கள் சங்கத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.