ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அமிதாப் பச்சன் இன்றி பால்கி படத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அந்தளவுக்கு அவரது படத்தில் அமிதாப்பிற்கு என்ற ஒரு முக்கிய ரோல் கொடுத்துவிடுவார். இந்தமுறை தான் இயக்க இருக்கும் படத்தில் அமிதாப்பை மட்டுமல்லாது அவரது மனைவியும், மாஜி ஹீரோயினுமான ஜெயா பச்சனையும் நடிக்க வைக்க போகிறார் பால்கி. பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான இவர்கள் கடைசியாக 2001ம் ஆண்டு கபி குஷி கபி கம் என்ற படத்தில் நடித்தனர். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது 14 ஆண்டுகளுக்கு பின்னர் பால்கி இவர்கள் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க இருக்கிறார். மேலும் இவர்கள் இருவரும் நடிக்க இருப்பது வெறும் கெஸ்ட் ரோல் தான். ஆனால் அந்த கெஸ்ட் ரோலையே அவ்வளவு சிறப்பாக எடுக்க இருக்கிறார் பால்கி. மும்பையில் கடந்த இருதினங்களாக இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சி படமாகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அர்ஜூன் கபூர், கரீனா கபூர் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர்.