Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வட சென்னை' மூன்று தோற்றங்களில் தனுஷ்

23 ஜூலை, 2015 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Dhanush-to-act-three-role-in-Vada-Chennai

'அனேகன்' படத்தில் அநேக தோற்றங்களில் நடித்த தனுஷ் அடுத்து வெற்றி மாறன் இயக்க உள்ள 'வட சென்னை' படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்க உள்ளாராம். தனுஷ் தற்போது நடித்து வரும் 'விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இந்தப் படத்தையடுத்து அவர் 'வட சென்னை' படத்தில்தான் நடிக்க உள்ளார். வெற்றிமாறன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கப் போகும் படம்தான் 'வட சென்னை'. வெற்றிமாறன், தனுஷ் கடைசியாக இணைந்த 'ஆடுகளம்' படம் வெளிவந்து நான்கு ஆண்டுகளாகிவிட்டது.


அதன் பின் சிம்புவை வைத்துத்தான் 'வட சென்னை' படத்தை இயக்குவதாக இருந்தார், ஆனால், அது கைவிடப்பட்டது. படத்தை இயக்கவில்லை என்றாலும் சில படங்களுக்கு கதை எழுதியும், 'காக்கா முட்டை' போன்ற படங்களைத் தயாரித்தும் வந்தார். திரையுலகில் அறிமுகமான இந்த 8 வருடங்களில் இதுவரை 'பொல்லாதவன், ஆடுகளம்' ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் வெற்றிமாறன்.


இதற்கிடையில் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள 'விசாரணை' என்ற ஒரு சிறிய படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் மொத்தமே ஒரு மணி நேரம் மட்டுமே ஓடும் என்பதால் இது வழக்கமான திரைப்படங்களின் எண்ணிக்கையில் சேருவதற்கு வாய்ப்பில்லை. இந்தப் படத்தின் டிரைலரே மிரட்டலாக இருந்து பல பாராட்டுக்களைப் பெற்றது. இந்தப் படத்தை திரையரங்கில் வெளியிடுவார்களா அல்லது விருதுகளுக்காக படம் மட்டுமா என்பது பற்றி எந்தவிதமான தெளிவான அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.


மீண்டும் வெற்றிமாறனுடன் இணைவதால் தனுஷ் 'வட சென்னை' படத்தில் அதிக ஈடுபாட்டுடனும், கவனத்துடனும் நடிக்கப் போவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in