டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |
சினிமா பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் இன்று (20ம்தேதி) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்வையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். முழுக்க முழுக்க மலேசிய நடிகர் - நடிகைகள் நடித்த ரத்த பேய் என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வாசுதேவன். மலேசியாவில் பிறந்ததால் மலேசியா வாசுதேவன் என்று அழைக்கப்பட்டார். அதன்பிறகு, இளையராஜாவின் இசைக்குழுவில் சேர்ந்து மேடைப்பாடகர் ஆனார். பிரபல பாடகர் சிதம்பரம் ஜெயராமன் குரலில் பாடி, புகழ்பெற்றார்.
உறவாடும் நெஞ்சம் என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகர் ஆனார். 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற `ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கும் மலேசியா வாசுதேவன் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மேலும் கவலைக்கிடம் ஆனதால் கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.




