பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சமீபத்தில் மறைந்தார். அவர் கடைசியாக இசை அமைத்த பாடல்கள் வி.சி.குகநாதன் இயக்குவதாக இருந்த இது எம்.ஜி.ஆர் இல்லம் என்ற படத்திற்காகத்தான். இந்தப் படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்க திட்டமிடப்பட்டது. படத்திற்கு ஏவிஎம் ஸ்டூடியோவில் பூஜையும் போடப்பட்டது. அதில் எம்.எஸ்.விஸ்வநாதன் கலந்து கொண்டு பாடல்கள் குறித்தும், எம்.ஜி.ஆருக்கும் தனக்குமான உறவு குறித்தும் நெகிழ்ச்சியாக பேசினார். அதன் பிறகு அந்தப் படம் சில காரணங்களால் கைவிடப்பட்டுவிட்டது.
இப்போது அந்தப் படத்தை மீண்டும் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் வி.சி.குகநாதன். இது எம்.ஜி.ஆர்.இல்லம் படத்திற்காக 7 பாடல்கள் போட்டுக் கொடுத்திருக்கிறார். எம்.எஸ்.விஸ்வாதன். அதில் 2 பாடல்கள் எம்.ஜி.ஆரை புகழ்ந்து பாடும் பாடல்கள், அதில் ஒன்றை தானே பாடியிருக்கிறார். இந்தப் பாடல்களை தற்போதைய முன்னணி பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். இந்த பாடல்களை கொண்டு மீண்டும் படத்தை துவக்க இருக்கிறார்கள். இதற்காக ராஜ்கிரனோடு வி.சி.குகநாதன் பேசி வருகிறார்.