ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தி திரையுலகின் டாப் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில், இந்த ரம்ஜான் விருந்தாக நாளை(ஜூலை 17ம் தேதி) வௌியாக இருக்கும் படம் பஜ்ரங்கி பைஜான். இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றியும், இப்படம் பற்றியும் சல்மான் என்ன சொல்கிறார் என்று நீங்களே பாருங்கள்...
பஜ்ரங்கி பைஜான் படம் பற்றி சொல்லுங்கள்...?
பஜ்ரங்கி பைஜான் படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படம். இந்தப்படத்தில் ஆக்ஷ்ன், எமோஷன் உள்ளிட்ட எல்லா விஷயங்களும் இருக்கிறது. அதனாலேயே இந்தப்படத்திற்கு நானே தயாரிப்பாளராகவும் மாறினேன். படத்தின் கதையில் ஒரு ஈர்ப்பு இருந்தது.
படத்தில் உங்க கேரக்டர் பற்றி...?
இந்தப்படத்தில் பவன் குமார் சதுர்வேதியாக நான் நடிக்கிறேன். மிகவும் நேர்மையான மனிதன். ஒருநாள் சிறுமி ஒருவரை சந்திக்கிறேன். இந்தியாவில் தவறவிடப்பட்ட பாகிஸ்தான் சிறுமி அவர். அந்த சிறுமியை அழைத்து கொண்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் செல்கிறேன். அதில் நான் சந்திக்கும் பிரச்னைகள் தான் படத்தின் கதை.
ஒரு படத்திற்கு புரமோஷன் அவசியம் தானா.?
கண்டிப்பாக ஒரு படத்திற்கு புரமோஷன் தேவை தான். ஒருவர் அடிக்கடி தியேட்டருக்கு போய் படம் பார்க்கிறார் என்றால் அவருக்கு பெரும்பாலும் சினிமா பற்றிய விஷயங்களும், யாருடைய படங்கள் வௌிவருகிறது என்பதும் அவருக்கு தெரியும். அப்படிப்பட்டவர்களுக்கு புரமோஷன் தேவையில்லை. அதேசமயம் வீட்டில் இருப்பவர்களையும் தியேட்டருக்கு கொண்டு வர இதுபோன்ற புரொமோஷன்கள் கண்டிப்பாக தேவை தான்.
உங்கள் ரசிகர்களை பற்றி சொல்லுங்க.?
நாளுக்கு நாள் எனக்கான ரசிகர்கள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி தான். எனது ரசிகர்களுக்காக நான் ஒரு சிறந்த படத்தை கொடுக்க கடுமையாக உழைத்து வருகிறேன். சில நேரங்களில் என்னையும் அறியாமல் சில தவறுகள் நடக்கின்றன. ஆனால் அதை திருத்திக் கொள்கிறேன். என் ரசிகர்களை நான் என்றும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை.
உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன.?
வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்கிறேன். நம்முடைய வாழ்க்கையில் இரண்டு விதமான சூழல்கள் உள்ளன. ஒன்று சரியானது மற்றொன்று தவறானது. நம்முடைய சூழலை பொருத்து நாம் சரியான வழியை தேர்ந்தெடுக்க வேண்டும், அப்போது தான் நாம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். நான் எப்போதும் சரியான பாதையை தான் தேர்வு செய்கிறேன். சில சந்தர்ப்பங்களில் நானும் தவறான பாதைக்கு செல்லக்கூடும், அதை தவறு என்று தெரிந்த பின்னர் என்னை திருத்தி கொள்வேன். இது தான் என் வெற்றியின் ரகசியம்.
நிறைய படங்களில் நடித்துள்ளீர்கள்.? உங்களை கவர்ந்த படம் எது.?
காதல், ஆக்ஷன், காமெடி என மாறுபட்ட கதைகளங்களில் நிறைய படங்களில் நான் நடித்துள்ளேன். இவ்வளவு படங்களில் நான் நடித்திருந்தாலும் நான் நடித்த முதல்படமான மெயின் பியார் கியா படம் தான் இன்றும் எனது மனதை கவர்ந்தவை. இதேப்போன்று ஹம் ஆப்கி கெயின் கவுன், ஹலோ பிரதர் போன்ற படங்களும் எனக்கு பிடிக்கும். இருந்தாலும் எனது முதல்படம் எனது பர்ஸ்ட் சாய்ஸ். மேலும் நான் ஒரு படத்தில் நடிக்கும் முன்பு எனது கேரக்டரை பார்க்க மாட்டேன், கதையை தான் பார்ப்பேன்.
ஒருவனுக்கு வெற்றி உழைப்பால் கிடைக்குமா.? அல்லது விதிப்படி நடக்குமா.?
என்னைப்பொறுத்த வரை நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்றால் கடுமையாக உழையுங்கள். ஒருவேளை நீங்கள் தவறான பாதையில் செல்ல உழைக்கிறீர்கள் என்றால் அது உங்களுக்கு சாதகமாக அமையாது. தொடர்ந்து கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறீர்கள் ஆனால் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்றால் தயவு செய்து உங்களது பாதையை மாற்றுங்கள்.
உங்கள் அடையாளத்தை மாற்றத்தான் 'பீயிங் ஹூயூமன்'-ல் இணைந்துள்ளதாக கூறப்படுகிறதே..?
இதில் உண்மை இல்லை. எனது அடையாளத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக நான் இதுபோன்று வேலைகளை செய்ய வேண்டும். முழுக்க முழுக்க குழந்தைகள் நலன் பெற வேண்டியே செய்து வருகிறேன். இதில் வேறு எந்த உள் நோக்கமும் இல்லை.
இவ்வாறு சல்மான் கூறினார்.