ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
வரும் ரம்ஜான் பண்டிகை ரிலீஸாக தான் நடித்துள்ள 'மதுர நாரங்கா' படம் வெளியாக இருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறார் குஞ்சாக்கோ போபன். காரணம் படத்தின் இயக்குனர் சுகீத் ஏற்கனவே 'ஆர்டினரி'' படம் மூலம் மூலம் குஞ்சாக்கோவை கைதூக்கி விட்டவர்.. ஆக இந்தப்படத்தின் வெற்றியை பற்றி கவலையில்லாமல் தான் தற்போது நடித்துவரும் 'வள்ளியும் தெட்டி.. புள்ளியும் தெட்டி' படத்தில் முனைப்பு காட்டி வருகிறார். இந்தப்படத்திற்காக தனது உடல் எடையில் சுமார் பத்து கிலோ வரை குறைத்திருக்கிறார். ஜிம்மிற்கு போவதில் அவ்வளவாக நாட்டம் இல்லாத குஞ்சாக்கோ, ரன்னிங், டான்சிங் என ரெகுலர் ஷூட்டிங் இடைவேளைகளிலேயே உடம்பை குறைத்து இப்போது பத்து வயது குறைந்தவராக மாறிவிட்டார்.
ஆனால் இவரது மனைவிக்கு மட்டும் இவர் மேல் பொறாமையாம்.. நீங்கள் மட்டும் எப்படி டக்கென வயது குறையலாம்” என்கிற கோபத்தில் விதவிதமாக சாப்பாட்டு வகைகளை செய்துபோட்டு குஞ்சாக்கோவை மீண்டும் எடையைக்கூட்ட திட்டம் போட்டு சமையலில் தன் கைவரிசையை காட்டுகிறாராம்.. மனைவி சமையலாச்சே தப்ப முடியுமா என செல்லமாக சலித்துக்கொள்ளும் குஞ்சாக்கோ, தொடர் உடற்பயிற்சியின் மூலம் எடையை கூட விடாமல் பார்த்துக்கொள்கிறாராம்.