ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தை அடுத்து பாம்பு சட்டை, உறுமீன், பெங்களூர் டேய்ஸ், மசாலா படம், இறைவி, கவலை வேண்டாம், கோ-2 ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் பாபி சிம்ஹா. பாம்பு சட்டை படத்தை ஆகஸ்டு மாதம் இறுதியில் திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. ஆதம் தாஸ் இயக்கும் இந்த படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இன்னொரு கேரக்டரில் ஷிவானியும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக செய்திகள் வெளியானபோதும். இன்னும் ஒரு பாடல் படமாக்கப்பட வேண்டியுள்ளது. அது பாபி சிம்ஹா அதிரடி ஆட்டம் போடும் குத்துப்பாடல். அந்த பாடலை படமாக்க தற்போது சென்னையில் செட் போடப்பட்டு வருகிறது.
மேலும், பாம்பு சட்டை படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளின் டப்பிங் வேலைகளும் தற்போது முடிந்து விட்டதாம். பாபிசிம்ஹா மட்டும் வேறு படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் அவர் மட்டுமே டப்பிங் பேச வேண்டியுள்ளதாம். அப்படி அவர் பேசி முடித்து, இந்த குத்துப்பாடலும் படமாக்கப்பட்டு விட்டால் பாம்புசட்டை ரிலீசுக்கு ரெடியாகி விடுமாம்.