ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் வருண் தேஜா, இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நடித்துள்ள கஞ்சி படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. இரண்டாம் உலக போரின் பின்னணியில் நடக்கும் இப்படத்தில் காதல் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. பர்ஸ்ட் பிரேம்ஸ் என்டர்டையின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பெரும் பொருட்செலவில் இப்படம் தயாரிக்கப்படுள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய தகவலின் படி இப்படத்தை அக்டோபர் 2 தேதி காந்தி ஜெயந்தி அன்று திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வருண் அப்படத்தைத் தொடர்ந்து டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். லோபர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது.