இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தமிழ்த்தாய் வாழத்தான, நீராரும் கடலுடுத்த... பாடலுக்கு இசை அமைச்சவரும் இவரே. 1965ல், இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவில், போர் முனைக்கே சென்ற குழுவோடு சென்று, கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டி, காயமுற்ற வீரர்களுக்காக பாடி உற்சாகப்படுத்திவர் விஸ்வநாதன்.
உலக இசையை தமிழில் புகுத்தியவர்
உலக இசையை தமிழில் புகுத்திய பெருமை இவரையே சாரும். எகிப்திய இசையை, பட்டத்து ராணி, பெர்சியன் இசையை நினைத்தேன் வந்தாய் நூறு வயது; ஜப்பானிய இசையை பன்சாயி காதல் பறவை; லத்தீன் இசையை யார் அந்த நிலவு; ரஷ்ய இசையை கண் போன போக்கிலே கால் போகலாமா; மெக்சிகன் இசையை முத்தமிடும் நேரமெப்போபாடல்களிலும் கொண்டு வந்தனர்.
20 நிமிடங்களில் இசையமைத்தவர்
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம்பெற்ற முத்தான முத்தல்லவோ பாடல், 20 நிமிடங்களில் இசையமைக்கப்பட்டது. இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை, சேலத்தில் மேடையேற்றியவரும் இவர்தான்.