ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.160 கோடி வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது. தெலுங்கு திரை உலகில் அதிக வசூல் சாதனை செய்ததாகக் கருதப்படும் மகதீரா படத்தின் வசூல் சாதனையை பாகுபலி படம் முறியடித்துள்ளது. இப்படத்தின் நாயகன் பிரபாஸிற்கு இணையான வேடம் பெற்ற வில்லன் ரானாவின் நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றது.
நடிகர் ரானா பாகுபலி படத்தின் வெற்றி குறித்து கூறுகையில், இப்படத்திற்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். மேலும் பாகுபலி படத்தின் முதல் பாகத்தைக் காட்டிலும் இராண்டாம் பாகத்திற்கு மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார். பாகுபலி தி பிகினிங் படத்துடன் அதன் இரண்டாம் பாகமான பாகுபலி தி கன்குலுசன் படம் மிக பிரமாண்டமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் எனவும் ரானா டகுபதி கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதம் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. பாகுபலி 2 படம் 2016 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.