ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தன்னுடைய கிளாமராலும், நடிப்பாலும் சில வருடங்கள் முன் வரை தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரேயா. இவ்வளவு சீக்கிரத்தில் இவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்துவிடும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தெலுங்கில் கடைசியாக நடித்த சில படங்களில் கூட அம்மாவாகத்தான் நடித்திருந்தார். தற்போது ஹிந்தியில் தயாராகியுள்ள 'த்ரிஷ்யம்' படத்தில் டீன்ஏஜ் பெண்ணுக்கு அம்மாவாகவே நடித்துள்ளார். இவ்வளவு சீக்கிரம் அம்மாவாக நடிக்க வந்துவிட்டீர்களே என்று அவரிடம் சமீபத்தில் கேட்டதற்கு அது பற்றியெல்லாம் அதிர்ச்சியடையாமல் அமைதியான பதிலைக் கொடுத்து பத்திரிகையாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்.
“அம்மா கேரக்டர்களில் நடிக்க ஆசையாகத்தான் உள்ளது. அம்மா கதாபாத்திரங்களில் நடிப்பது மிகவும் எளிதானது,” என்று பதிலளித்திருக்கிறார் இந்த 32 வயதே ஆன இளம் அம்மா. “அஜய் தேவகனின் ரசிகை நான். அதோடு அவருடன் நடிப்பது மிகவும் வசதியாக இருந்தது. தபு போன்ற நடிகைகளுடனும் நடிப்பது நல்ல அனுபவமாக இருந்தது,” என்று தெரிவித்துள்ளார்.