ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலாஜி சக்திவேல் இயக்கிய, ''வழக்கு எண் 18/9'' படத்தில் நடித்தவர் மனீஷா. அதன்பிறகு பெரிய அளவில் வளருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர், பின்னர் ஜன்னல் ஓரம், ஆதலால் காதல் செய்வீர், பட்டைய கிளப்பணும் பாண்டியா என சில படங்களில் நடித்தார். ஆனபோதும், அவரால் இன்னமும் மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் தான், தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார் மனீஷா. இதே படத்தில் நடித்திருக்கும் இன்னொரு நாயகிதான் கயல் ஆனந்தி. கதைப்படி இவர்தான் படத்தின் முக்கிய நாயகி என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இப்படி இவர்கள் இருவரும் ஒரே படத்தில் நாயகிகளாக நடித்திருந்தபோதும் அவர்கள் ஒரு காட்சியில்கூட இணைந்து நடிக்கும்படியாக கதை இல்லையாம். அதனால், அப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது அவர்கள் ஒருநாள்கூட சந்தித்துக் கொண்டதில்லையாம். படத்தின் ஆடியோ விழாவின்போதுதான் மேடையில் சந்தித்து அறிமுகமாகிக் கொண்டார்களாம். அதோடு, இருவரும் மேடையில் நீண்டநாள் தோழிகளைப்போன்று நன்றாக சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.