லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் | பெயரை மாற்ற போகிறாரா தெலுங்கு நடிகர் நானி? | விஜய் பிறந்தநாளில் 'ஜனநாயகன்' அறிமுக டீசர் வெளியாகிறது? |
விஜய் ஆண்டனி நடித்த நான் படத்தில் மக்காஏல மக்கா ஏல -என்ற ஹிட் பாடலை எழுதிய ப்ரியன், அதற்கடுத்து அதே விஜய்ஆண்டனி இசையமைத்த நடித்த சலீம் படத்திலும் மஸ்காரா போட்டு மயக்குறியே என்ற பாடலை எழுதினார். இந்த இரண்டு குத்துப்பாடல்களுமே அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அவரிடத்தில் மெலோடியை விட குத்துப்பாடல்கள் எழுதுவதில்தான் நீங்கள் ஸ்பெசலிஸ்டா? என்று கேட்டால், அப்படி எதுவும் இல்லை. எல்லாவிதமான சூழலுக்கும் நான் பாடல்கள் எழுதியிருக்கிறேன்.
கோலிசோடா படத்தில் நான் எழுதிய ஜனனம் ஜனனம் -என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. இதேபோல் பல மெலோடி பாடல்களை பல படங்களில் எழுதியிருக்கிறேன். இப்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் பிச்சைக்காரன் படத்தில் சில அற்புதமான மெலோடி டியூனுக்கு பாடல் எழுதியிருக்கிறேன். மேலும், என்னைப்பொறுத்தவரை என்னை அதிகம் பாதித்த கவிஞரான வாலியைப் போன்று எல்லாவிதமான சூழலுக்கும் பாடல் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனது எதிர்கால திரையிசைப்பாடல்களின் பயணம் வாலியை பின்பற்றியே இருக்கும் என்கிறார் பாடலாசிரியர் ப்ரியன்.