விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் | ரஜினியின் முதல் படமும், 50வது ஆண்டு 'கூலி' படமும் வெளியாகும் ஒரே தியேட்டர் |
ஒரு படம் உண்மையான வெற்றி பெற்றால் அவர்களே வெற்றியைக் கொண்டாடிக் கொள்வார்கள். ஆனால், வெற்றி பெற திணறிக் கொண்டிருந்தால் பத்திரிகையளார்களை அழைத்து படம் வெற்றி என மக்களுக்கு சொல்லச் சொல்வார்கள். அந்த வகையில் 'பாபநாசம்' படக் குழுவினர் படத்தின் வெற்றியை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல், அவர்களுக்குள்ளாகவே கொண்டாடிக் கொண்டுள்ளார்கள்.
அந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கமல்ஹாசன், கௌதமி, இயக்குனர் ஜீது ஜோசப், இசையமைப்பாளர் ஜிப்ரான், படத்தில் நடித்துள்ள மற்ற கலைஞர்கள், படத் தயாரிப்பாளர்கள், அவர்களின் நெருங்கிய நண்பர்கள் என சில முக்கிய புள்ளிகளே கலந்து கொண்டுள்ளனர். 'உத்தம வில்லன்' படம் தோல்வியடைந்து கொஞ்சம் வாடிப் போயிருந்த கமல்ஹாசனுக்கு 'பாபநாசம்' படத்தின் வெற்றி மிகப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளதாம். படம் வெளிவருவதற்கு முன் அவருடைய ஒட்டு மீசை பற்றியும், கௌதமியை ஜோடியாக்கியது பற்றியும் பல்வேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்தன. ஆனாலும், அதையும் மீறி மக்கள் படத்தை ஏற்றுக் கொண்டது அவருக்கு தனிப்பட்ட சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம்.
அந்த உற்சாகத்தில் 'தூங்காவனம்' படத்தையும் சீக்கிரமே முடித்து வெளியிடும் முனைப்பில் இருக்கிறாராம் கமல்ஹாசன்.