Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜூனியர் நயன்தாரா என்று அழைக்காதீர்கள்! -அகிலா கிஷோர் வேண்டுகோள்

05 ஜூலை, 2015 - 08:28 IST
எழுத்தின் அளவு:
Dont-call-me-as-Junior-Nayanthara-:-Akila-Kishore

நயன்தாரா மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்தபோதுதான் காதல் சொல்ல வந்தேன் படத்துக்காக கன்னடத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதியானார் மேக்னா ராஜ். அவரது தோற்றம் நயன்தாராவை நினைவுபடுத்தியதால் அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவரை ஜூனியர் நயன்தாரா என்று அழைத்தனர். அதனால் நயன்தாரா இடத்தை இந்த புதுவரவு நடிகை கைப்பற்றி விடுவார் என்றுதான் அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேக்னாராஜ் நடித்த காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததால் ராசியில்லாத நடிகையாகி தமிழ் சினிமாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


இந்த நிலையில், பார்த்திபன இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு கன்னட நடிகை அகிலா கிஷோரும் நயன்தாராவின் ஜெராக்ஸ் காப்பி போன்று இருப்பதால், இப்போது அவரையும் ஜூனியர் நயன்தாரா என்றே கோடம்பாக்கத்தில் அழைத்து வருகின்றனர். ஆனால், மேக்னாராஜ்க்கு ஏற்பட்ட நிலைமை தனக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கும் அவர், தயவு செய்து என்னை ஜூனியர் நயன்தாரா என்று அழைக்காதீர்கள். நான் எப்போதுமே அகிலா கிஷோர்தான். அவர் அவர்தான். நான் நான்தான் என்று கூறி வருகிறார்.


மேலும், பார்த்திபன் படத்தை அடுத்து சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படத்திலும் நாயகியாக நடித்த அகிலா கிஷோர், அதையடுத்து மூன்றாம் உலகப்போர் என்ற படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். அப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், சினிமா சம்பந்தப்பட்ட ஒரு படிப்புக்காக தற்போது வெளிநாட்டில் முகாமிட்டிருப்பவர், நாடு திரும்பியதும் மேலும் சில புதிய படங்களிலும் கமிட்டாகி பிசியான நடிகையாகப்போகிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in