காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
விஜய் நடித்த கத்தி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் அனுகிருஷ்ணா. இவர் தற்போது சின்னஞ்சிறிய வண்ணப்பறவை, வெள்ளக்காக்கா மஞ்சக்குருவி உள்பட சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படங்களில் நடிக்க கமிட்டானபோது கதைக்கேற்ப நடிக்கிறேன் என்று சொல்லிதான் ஒப்பந்தமானாராம்.
ஆனால் பாடல் காட்சிகள் படமானபோது கிளாமர் உடையணிந்து நடிக்க வேண்டும் என்று டைரக்டர்கள் சொன்னபோது, இந்த மாதிரி டிரஸ் அணிந்து நடித்து எனது இமேஜை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்று உடம்பை முழுசாக கவர் பண்ணும் ஆடைகளை மட்டுமே அணிந்து நடித்தாராம் அனுகிருஷ்ணா.
அதோடு, ஒரு காட்சியில் ஹீரோவிடம் காதலை சொல்லும்போது கன்னத்தில் முத்தம் கொடுக்க வேண்டும் என்றபோதும் பிடிவாதமாக மறுத்து விட்டாராம். காதலை கண்களாலேயே சொல்லி விடலாம். முத்தம் கொடுத்துதான் வெளிப்படுத்த வேண்டும் என்கிற அவசியமெல்லாம் இல்லை என்று கூறினாராம். மேலும், எப்படிவேண்டுமானாலும் நடிப்பதற்கு பலர் இருக்கலாம். ஆனால் நான் இப்படித்தான் நடிப்பேன். படமே வரவில்லை என்றாலும் எனக்கு கவலையில்லை என்றும் கண்டிசனாக பேசுகிறாராம். இதனால் அடுத்தடுத்து அனுகிருஷ்ணாவை புக் பண்ண பேசிக்கொண்டிருந்த இயக்குனர்கள் பின்வாங்கிக்கொண்டிருக்கின்றனர்.