ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பட்ட காலிலேயே படும் என்பதுபோல்.. உத்தமவில்லன் படத்தில் ஏற்பட்ட நஷ்டம் லிங்குசாமியை இன்னமும் படுத்தி எடுக்கிறது.
சிவகார்த்திகேயனை வைத்து லிங்குசாமி தயாரித்த படம் ரஜினிமுருகன்.
இயக்குநர் பொன்ராம், இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரை உள்ளடக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்த ரஜினி முருகன் படம் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாய் முடிவடைந்தது.
இம்மாதம் 17 ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஆரம்பத்திலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது.
அவர்கள் குறிப்பிட்ட தேதிக்கு சில நாட்களே உள்ளநிலையில் ரஜினி முருகன் படத்துக்கான புரமோஷன் கூட இன்னும் துவங்கவில்லை.
என்ன காரணம் என விசாரித்தால்... புதிய தகவல் சொல்கிறார்கள்.உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களினால் ஏற்பட்ட கடன்களை அடைப்பதற்கு தேவையான பணத்தை புரட்ட வேண்டியுள்ளதால், ரஜினிமுருகன் பட புரோமோஷன் இன்னும் துவங்கப்படவில்லையாம்..இதன்காரணமாக, ரஜினிமுருகன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.