ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தான் நடிக்கும் படங்களை யார் தயாரித்தாலும் விஷால் போடும் முதல் கண்டிஷனே அப்படத்தின் ஆடியோ ரைட்ஸை தன்னுடைய வி மியூஸிக் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்பதுதான். தன்னுடைய தங்கையின் நிர்வாகத்தில் வி மியூஸிக் நிறுவனத்தை நடத்தி வரும் விஷால் பூஜை படத்தின் இசையை முதன்முறையாக தன்னுடை ஆடியோ கம்பெனி சார்பில் வெளியிட்டார்.
தற்போது பாயும் புலி படத்தின் ஆடியோ உரிமையை வி.மியூசிக் நிறுவனத்துக்காக கைப்பற்றியுள்ளார்.
வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கால்ஷீட் கொடுத்தபோதே இது குறித்து ஒப்பந்தம் போடப்பட்டதாம்.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் முதலானோர் நடித்து வந்த 'பாயும் புலி' படத்தின் படத்துக்கு டி.இமான் இசை அமைத்து வருகிறார். படப்பிடிப்பு முடிவடைந்தததைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடகஷன் வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பாயும்புலி படத்தின் சிங்கிள் டிராக்கை வருகிற 15-ஆம் தேதி வெளியிட உள்ளனர்.
படத்தின் ஆடியோவை ஆகஸ்ட் 2-ஆம் தேதியும் வெளியிட தீர்மானித்துள்ளனர்.
விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் ஆடியோ வெளியீடும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.