ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மம்முட்டியாவது, நடிகையின் வயிற்றில் குத்துவதாவது.. அப்படி குத்தினாலும் படத்தில் மம்முட்டி பாக்ஸராக நடித்திருப்பார் அதனால் இன்னொரு பாக்ஸராக நடிக்கும் நடிகையின் வயிற்றில் குத்தியிருப்பார் என விதவிதமாக மம்முட்டியை நியாயப்படுத்தி நீங்கள் யூகிக்கும் காரணங்கள் எதுவுமே இதற்கு பொருந்தாது. காரணம் இது தமாஷான ஒரு விஷயம் தான். மம்முட்டி தற்போது மார்த்தாண்டன் என்பவர் டைரக்சனில் 'அச்சா தின்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் அவருக்கு ஜோடியாக் நடிப்பவர் பஞ்சாபி நடிகை மான்சி சர்மா. ஜார்கண்டில் இருந்து கேரளாவுக்கு வந்து பல வருடங்களுக்கு முன்னரே செட்டிலான கேரக்டர் மம்முட்டியுடையது. அவரது மனைவியாக நடிக்கும் மான்சி சர்மா, படத்தில் பெரும்பாலான காட்சிகளில் கர்ப்பிணியாகவே நடித்துள்ளார். இந்த கர்ப்பிணி வேஷத்தில் மம்முட்டி அவரை சைக்கிளில் முன்னால் அமரவைத்துக்கொண்டு சாலையில் ஓட்டிவருவது போல காட்சிகள் எல்லாம் சமீபத்தில் எர்ணாகுளம் டவுனில் எடுக்கப்பட்டன.
மான்சி கர்ப்பிணியாக நடித்த காட்சிகள் படமானபோது, படப்பிடிப்பு இடைவேளை நேரத்தில், அவரது வயிற்றில் பொய் கர்ப்பமாக மறைத்து வைக்கப்பட்ட தலையணையை, மம்முட்டி அவ்வப்போது செல்லமாக குத்தி, மான்சியை கிண்டல் செய்வாராம். அதைவிட பியூட்டி என்னவென்றால், மான்சிக்கு பல நாட்களாக கர்ப்பிணியாகவே நடித்ததால், தான் ஒரு கர்ப்பிணி என்கிற எண்ணமே படப்பிடிப்பு முடிந்தும் கொஞ்ச நாள் வரைக்கும் இருந்ததாம்.