14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
பொம்மலாட்டம் சீரியல் மூலம் புகழ்பெற்றவர் ஸ்ரீஜா. ஒரே தொடரில் 3 வருடங்களாக நடித்து வருகிறார். இடையில் வந்த பல சினிமா வாய்ப்புகளை தவிர்த்து விட்டார். தற்போது ஸ்ரீஜாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். "பொம்மலாட்டம் தொடரில் தான் அறிமுகமானேன். தொடர்ந்து அதில் நடித்து வருகிறேன். தொடரும், கேரக்டரும், அதற்கு மக்கள் தரும் ஆதரவும் பிடித்துப்போனதால் மற்ற விஷயங்கள் பற்றி நான் யோசிக்கவில்லை. பொம்மலாட்டம் முடிந்த பிறகு இதேபோன்ற வலுவான கேரக்டர் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன். இதற்கிடையில் வீட்டில் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார்கள். மாப்பிள்ளையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு இதுவரை காதல் வரவில்லை. காதலிக்க தைரியமும் இல்லை" என்கிறார் ஸ்ரீஜா.