ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அப்புக்குட்டியை அழகுகுட்டியாக மாற்றி அஜித் எடுத்த புகைப்படங்கள் இன்றைக்கு டாக் ஆப் த கோலிவுட். திரைத்துறையில் மட்டுமின்றி ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களிலும் இது குறித்துத்தான் பலரும் பேசுகிறார்கள். அதோடு, அப்புக்குட்டியை விதவிதமாகவே அஜித் எடுத்த புகைப்படங்கள் இப்போது இணையதளத்தை கலக்கிக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, அப்புக்குட்டியை அவரது நிஜப்பெயர் சொல்லி அழைத்த அஜித், மற்றவர்களும் அவரை சிவபாலனாக அழைக்க வேண்டும் என்று சொன்னதும் ஆச்சர்யமான விஷயமாக விவாதிக்கப்படுகிறது. அப்புக்குட்டி என்கிற சிவபாலனை அஜித் எடுத்த புகைப்படங்களில் அவர் சேகுவேரா கெட்டப்பில் இருப்பது போன்ற புகைப்படமும் ஒன்று... இப்படி ஒரு புகைப்படத்தை எடுத்த காரணத்தினால் சேகுவேராவின் அபிமானிகள் மத்தியிலும் அஜித்தின் புகழ் கூடிவிட்டது. சமூகவலைத்தளங்களில் அஜித்தைப் பாராட்டித்தள்ளுகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, அப்புக்குட்டியை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அஜித்திற்கு எப்படி வந்தது? என்ற கேள்வியும் பலருக்கும் இருக்கிறது. அவரை வைத்து குறும்படம் எடுக்கும் எண்ணத்தில்தான் அதற்கான முன்னோட்டமாக இப்படியொரு போட்டோசெஷனை எடுத்தாரா என்றும் கேள்வி எழுப்புகின்றனர். எது உண்மை என்று அஜித் சொன்னால்தான் தெரியும். அதுவரை ஆளாளுக்கு மனதில் பட்டதை பேசிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.