விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
ஹரி இயக்கிய சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்களில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் அனுஷ்கா. சூர்யாவை விட அனுஷ்கா அதிக உயரமானவர் என்பதால், அவர்களை நெருக்கமாக வைத்து எடுக்கும் காட்சிகளை சூர்யாவை உயரமான இடத்தில் நிற்க வைத்தே படமாக்கினார் ஹரி.
மேலும், முதல் இரண்டு பாகத்தில் அவர்களை காதலர்களாக காண்பித்த ஹரி, அடுத்து இயக்கும் சிங்கம் 3ம் பாகத்தில் அவர்களை கணவன்-மனைவியாகவே காண்பிக்கிறாராம். கதைப்படி அவர்களுக்கு குழந்தைகள் இருப்பதாககூட கூறப்படுகிறது. அதனால், ஒரு குழந்தைப்பெற்ற குடும்பப் பெண்ணுக்குரிய உடல் அமைப்புடன் அனுஷ்கா மாற வேண்டும் என்று கூறியிருக்கிறாராம் இயக்குனர்.
அதனால், தற்போது ஆர்யாவுடன் நடிக்கும் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை அதிகப்படுத்தி, குறைத்து என இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடிக்கும் அனுஷ்கா, இந்த படத்தை முடித்ததும் சிங்கம்-3க்காக வெயிட் போடப்போகிறாராம்.