ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
62வது பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று இரவு நடந்தது. இதில் சிறந்த நடிகராக தனுஷ் (வேலையில்லா பட்டதாரி), சிறந்த நடிகை மாளவிகா (குக்கூ) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படமாக விஜய் நடித்த கத்தி படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் சிறந்த இயக்குனருக்கான விருது வெற்றார். கார்த்தி மெட்ராஸ் படத்தில் நடித்தத்காக சிறந்த நடிகருக்கான விமர்சகர் (கிரிட்டிக் அவார்ட்) விருதினை பெற்றார்.
சிறந்த துணை நடிகராக பாபி சிம்ஹா (ஜிகிர்தண்டா), சிறந்த துணை நடிகையாக ரித்விகா (மெட்ராஸ்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த இசை அமைப்பாளர் அனிருத் (வேலையில்லா பட்டதாரி) சிறந்த பாடலாசிரியர் நா.முத்துகுமார் (சைவம்), சிறந்த பாடகர் பிரதீப் குமார் (ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா&மெட்ராஸ்), சிறந்த புதுமுக நடிகை கேத்ரின் தெரசா (மெட்ராஸ்). சிறந்த புதுமுக நடிகர் துல்கர் சல்மான் (வாய்மூடி பேசவும்) சிறந்த நடன இயக்குனர் ஷோபி (கத்தி) ஆகியோரும் விருது பெற்றனர். இயக்குனர் ஐ.வி.சசிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கக்பட்டது.
இந்த விருது பட்டியலில் வசந்தபாலன் இயக்கிய காவியத் தலைவன் பத்து விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு விருது கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.