ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளிவந்த S/O சத்யமூர்த்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் இயக்குநர் பூபதி ஸ்ரீனு இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு நாயகியாக நடிக்க ராகுல் ப்ரீத்தி சிங் ஒப்பந்தமாகியுள்ளாராம். ரவிதேஜாவுடன் கிக் 2 படத்தில் நடித்து முடித்துள்ள ராகுல் ப்ரீத்தி சிங், ஜூனியர் என்.டி.ஆருடன் புரூஸ் லீ மகேஷ்பாவுடன் பிரமோற்சவம் போன்ற படங்களில் நாயகியாக நடிக்கின்றார். தற்போது அல்லு அர்ஜுன் படத்திலும் ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இப்படத்தில் நடிக்கும் இரண்டாவது நாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகின்றதாம். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூலையில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். அல்லு அர்ஜுன் அனுஷ்காவுடன் நடித்துள்ள சரித்திர திரைப்படமான ருத்ரமாதேவி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.