விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
குயின், தானு வெட்ஸ் மானு படங்களின் வெற்றியை தொடர்ந்து உற்சாக பூரிப்பில் உள்ள கங்கனா ரனாவத், தற்போது கட்டிபட்டி படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, கங்கனா ரனாவத், கேத்தன் மேத்தாவின் இயக்கத்திலான படத்தில் நடிக்க உள்ளார். இந்தோ - பிரிட்டிஷ் கூட்டாக இணைந்து, இப்படத்தை தயாரிக்க உள்ளது. கேத்தன் மேத்தா இயக்கத்திலான இப்படத்தில், கங்கனா ரனாவத் , ராணி லட்சுமி பாய் கேரக்டரில் நடிக்க உள்ளார். நான் பள்ளிப்பாடத்திட்டத்தில்தான் ராணி லட்சுமி பாய் குறித்து படித்திருந்தேன். தற்போது, ராணி லட்சுமி பாய் கேரக்டரில் நடிக்க உள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கேரக்டருக்காக, குதிரையேற்றம், கத்தி மற்றும் வாள் சண்டை உள்ளிட்ட தற்காப்புக்கலைகளை கற்க உள்ளேன் என்று கங்கனா ரனாவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் பிற்பகுதிவாக்கில், இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.