ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான 'பெங்களூரு டேய்ஸ்'படம் தமிழில் ரீமேக் ஆகிறதல்லவா..? பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை 'பொம்மரிலு' பாஸ்கர் இயக்குகிறார். இதற்கு பெயர் வைப்பதற்குள் இயக்குனர் பாஸ்கருக்கு நாக்கு தள்ளிவிடும்போல இருக்கிறது. முதலில் சிங்கப்பூர் டேய்ஸ்.. அப்புறம் இதுவும் கடந்து போகும் என டைட்டில்கள் ஒவ்வொன்றாக மாறி, இப்போது ஏ.டி.எம்.கே என பெயர் வைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது படத்தின் கேரக்டர்களான அர்ஜூன், திவ்யா மற்றும் கார்த்திக் ஆகியோரின் முதல் எழுத்துக்கள் தான் டைட்டிலாக மாறியுள்ளது. ஆனால் மேலிடத்தில் இருந்து இதற்கான அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
'பெங்களூரு டேய்ஸ்' படத்தில் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் பாலி ஆகியோர் நடித்த கேரக்டர்களில் முறையே ஆர்யா, ராணா டகுபதி, பாபி சிம்ஹா ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகியாக நஸ்ரியா நடித்த வேடத்தில் ஸ்ரீதிவ்யா நடிக்க, ஒரிஜினலில் பார்வதி மேனன் நடித்த கேரக்டரில் மீண்டும் அவரே நடிக்கிறார். ஆனால் நித்யா மேனன் நடித்த கேரக்டரில் அவரே நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.. அனால் இப்போது லேட்டஸ்ட் தகவலாக நித்யா மேனன் ரோலில் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என செய்தி கசிந்துள்ளது. இது கூட படத்தில் ஆர்யாவின் லவ்வர் ரோல் என்பதால், ஆர்யாவின் ஸ்பெஷல் அழைப்பின் பேரில் தான் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.