ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இனிது இனிது, தேனீர் விடுதி, பர்மா படங்களில் நடித்தவர் ரேஷ்மிமேனன். கேரளாவைச் சேர்ந்தவரான இவரும், லட்சுமிமேனன் பாணியில் கிளாமருக்கு செக்போஸ்ட் வைத்துதான் நடித்து வருகிறார். அதேசமயம், அவரை மாதிரி வில்லேஜ் கேரக்டரில் நடிக்கவே அதிக ஆர்வமாக இருந்து வந்தார்.
இந்தநிலையில், பாபி சிம்ஹா நடித்துள்ள உறுமீன் படத்தில் அவர் எதிர்பார்த்ததைவிடவும் ஒரு அற்புதமான வேடம் கிடைத்துள்ளதாம். அதனால் தமிழில் இதுவரை நான் நடித்து வெளியான 3 படங்களுமே தோற்றுவிட்ட நிலையில், இந்த படம் எனக்கு பெரிய ஹிட்டாக அமையும் என்று கூறிவருகிறார் ரேஷ்மிமேனன்.
மேலும், இதன்பிறகு கிருமி, நட்பதிகாரம் 79 ஆகிய படங்களிலும் நடித்திருக்கும் அவர் இந்த படங்களில் பிரபலமில்லாத ஹீரோக்களுடன் நடித்திருந்தபோதும், உறுமீன் வெற்றிக்கு பிறகு தனக்கு முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகிறார் ரேஷ்மிமேனன். அதோடு, பக்கா கமர்சியல் கதை என்கிறபோது கவர்ச்சி விசயத்தில் ஓரளவு விட்டுக்கொடுத்து நடிக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார் ரேஷ்மிமேனன்.