ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. இதில் தற்போதைய தலைவர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் மோத இருக்கிறார்கள். இதற்காக இரு அணியினரும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடக நடிகர்களின் வாக்குகளை சேகரித்து வருகிறார்கள்.
சரத்குமாருக்கு எதிராக விஷாலை தூண்டிவிடுவது வரட்சுமிதான் என்று பேஸ்புக், டுவிட்டரில் பலரும் கருத்து சொல்லி வருகிறார்கள். இதனை வரலட்சுமி மறுத்து தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது "சிறிதளவும் உண்மையில்லாத முட்டாள்தனமான செய்திகளை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். ஒரு விஷயத்தை அனைவருக்கும் தெளிவு படுத்த விரும்புகிறேன். நான் எப்போதுமே என் அப்பா சரத்குமாருக்குத்தான் ஆதரவு தருவேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.