ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஐ எனும் பிரமாண்ட படத்திற்கு பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ''10 எண்றதுக்குள்ள''. கோலிசோடா படத்தை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தை இயக்க, விக்ரம் ஜோடியாக சமந்தா இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். கூடவே ஒரு பாடலுக்கு நடிகை சார்மி குத்தாட்டம் போட்டிருக்கிறார். டிரான்ஸ்போர்ட்டர் பட பாணியில் உருவாகி வரும் இப்படம், சென்னையில் தொடங்கி நோபளம் வரை படப்படிப்பு நடத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்தமாதத்திலோ இப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற உள்ளது. அதனைத்தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் மற்றும் புரொமோஷன் வேலைகள் துவங்குகின்றன. செப்டம்பர் மாதத்தில் படத்தின் ஆடியோ வௌியீட்டு விழாவையும், அதனைத்தொடர்ந்து அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று படத்தையும் ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளனர்.