ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர் சங்க தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என நடிகர் விஷால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருச்சியில் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஷால் இதனை தெரிவித்துள்ளார்.
விஷால் கூறுகையில், நடிகர் சங்க தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம். போட்டியில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் சங்க கட்டிடத்தை நிச்சயம் கட்டி முடிப்போம். தேர்தலுக்கு முன்பாகவே மதுரை நாடக நடிகர்களுக்கு கட்டிடம் கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.