பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

சில படங்களின் பாடல் காட்சிகளில் ஸ்டைலிஷான கெட்டப்பில் தோன்றினார் விஜய். ஹேர் ஸ்டைல் மட்டுமின்றி, வித்தியாசமான காஸ்டியூம் அணிந்து ஆக்டு கொடுத்தார். ஆனால், துப்பாக்கிக்கு பிறகு பெரிய வித்தியாசம் காட்டாத விஜய், புலியில் சரித்திர கெட்டப்பில் நடித்திருப்பவர், அட்லி இயக்கும் தனது 59வது படத்தில் இதுவரை நடிக்காத புதுமையான ஸ்டைலிஷ் கெட்டப்பில் நடிக்கிறாராம்.
ஏற்கனவே மணிரத்னம இயக்கிய மெளனராகம் படத்தை ராஜா ராணி என்ற பெயரில் லேட்டஸ்ட் பாணியில் இயக்கியதோடு, காட்சியமைப்புகளை வித்தியாசமான படமாக்கியவர் அட்லி. அதனால் இந்த விஜய் படத்தில் இன்னும் புதுமையை கையாள திட்டமிட்டுள்ளார்.
குறிப்பாக, பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பாசறையில் இருந்து வந்தவர் என்பதால், இந்த படத்தில் ஷங்கர் பாணியில் பிரமாண்டத்தை அதிகப்படுத்துகிறாராம் அட்லி. படத்தில் நடிப்பவர் விஜய், தயாரிப்பவர் எஸ்.தாணு என்பதால், இவர் விருப்பம் போல் படமாக்க அவர்களும் ஓகே சொல்லி விட்டார்களாம். அதனால் கோலிவுட்டில் தனது குருநாதர் ஷங்கருக்கு பிறகு அடுத்த பிரமாண்ட இயக்குனராக வேண்டும் என்று இப்படத்தின் மூலம் அதற்கான அடித்தளத்தை அமைக்கப்போகிறாராம் அட்லி.




