பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சுந்தர்.சியின் கலகலப்பு படத்தில் தனது குத்தாட்ட பிரவேசத்தை தொடங்கியவர் அஞ்சலி. அந்த படத்தில் இவர்தான் நாயகி என்றபோதும், பாடல் காட்சிகளில் இடுப்பை வளைத்து நொடித்து அவர் ஆடிய விதம் குத்தாட்ட நடிகைகளுக்கு கிளாஸ் எடுப்பது போல் இருந்தது. அதனால் அதை கப்பென்று பிடித்துக்கொண்ட இயக்குனர்கள், பின்னர் அவர் நடித்த ஒவ்வொரு படங்களிலுமே அஞ்சலியை அதிரடியான பாடல்களில் ஆட வைத்தனர். அதோடு சிங்கம்-2 படத்திலும் சூர்யாவுடன் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடினார் அஞ்சலி. இந்த நிலையில, தற்போது ஜெயம்ரவியுடன் நடித்துள்ள அப்பாடக்கர் படத்திலும் ஒரு பாடலில் அயிட்டம் நடிகைகளைப்போன்று ஆட்டம் போட்டுள்ளாராம் அஞ்சலி. அந்த பாடலில் ஜெயம்ரவி-சூரி என பலரும் கலந்து ஆட, அஞ்சலி கவர்ச்சி உடைதரித்து அட்டகாசமான ஆட்டம் போட்டிருக்கிறாராம். அதனால் அந்த பாடல் தனது ரசிகர்களுக்கு புதிய விருந்தாக அமையும் என்றும் எதிர்பார்க்கிறாராம் அஞ்சலி.