Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மறதி என்று ஒன்று இருக்கும்வரை என் படம் புதுசுதான்- ரீங்காரம் இயக்குநர் சிவகார்த்திக்

16 ஜூன், 2015 - 14:43 IST
எழுத்தின் அளவு:
Reengaram-movie-director-Sivakarthik-speech

ஹரி இயக்கிய சேவல் வெற்றிப் படத்தை தயாரித்த ஜே ஸ்டுடியோஸ் ஜின்னா தயாரிக்கும் படம் ரீங்காரம். படத்தை இயக்குபவர் சிவகார்த்திக். இவர் சமுத்திரக்கனி, பாலசந்தர், மூர்த்தி , அரசுசுரேஷ் என பல இயக்குநர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். ஒளிப்பதிவு இனியன் ஹரிஸ், இசை--அலிமிர்ஷா. இவர் ஆதார் ,சமுத்திரக்கனி நடித்த புத்தனின் சிரிப்பு படங்களின் ஒளிப்பதிவாளர். பொருட் செலவு, பிரமாண்டங்கள் மத்தியில் மனதைத் தொடும் கதைகளும் காட்சிகளுமே வெற்றி பெறும்; பேசப்படும் .அந்த வகையில் உணர்வுகளின் உன்னதம் பேசும் படம்தான் ரீங்காரம். இது வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவம். அதைப் பின்னணியாக வைத்து திருச்சியைக் கதைக் களமாக வைத்து படம் உருவாகியிருக்கிறது. படத்தின் கதையை விட அதன் திரைக்கதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டே படம் தயாரிக்க முன்வந்ததாகக் கூறுகிறார் தயாரிப்பாளர் ஜின்னா. இது ஒருநாளில் நடக்கும் கதை. கதையின் விறுவிறுப்புக்கும் வேகத்துக்கும் வேகத்தடை வேண்டாம் என்று படத்தில் இரண்டே பாடல்கள்தான் . ஒன்றை குட்டிப்புலி அருவா மீச புகழ் பத்மலதா பாடியுள்ளார். பாலா என்கிற புது முகம் நாயகன். பிரியங்கா நாயகி. கலாபவன் மணி, ஜெயபாலன் நடித்துள்ளனர்.


ஜெயபாலன் இருட்டில் வாழும் ஆடுகளம் பூதமாக வித்தியாச வேடம் தாங்கியுள்ளார். வில்லனாக கலாபவன் மணி நடித்துள்ளார். விஜய்டிவிபுகழ் சிங்கப்பூர் தீபன் சிரிக்க வைப்பார். படத்தில் மலிவான காமெடி இல்லை.மனதிற்குள் ரசிக்கும் காமெடி உண்டு. இது புதிய கதை இல்லை எல்லாருக்கும் தெரிந்த கதைதான். கோணங்களில் வித்தியாசப் படுத்திக் காட்டியிருப்பதாக இயக்குநர் கூறுகிறார்.


படம் பற்றி இயக்குநர் கூறும் போது, மனிதன் அவன் வாழ்நாளில் கடக்கிற ஒட்டுமொத்த உணர்வுகளையும் நிகழ்வுகளையும் இரண்டே விஷயத்தில் தெளிவாகச் சொல்லி விடலாம். ஒன்று சிரிப்பு இன்னொன்று அழுகை. இந்த இரண்டு விதமான உணர்வுகளையும் சரிவர பயணம் செய்து பார்த்த மனிதர்களிடமிருந்தும் படித்த புத்தகங்களிடமிருந்தும் எடுத்து சொல்லியிருக்கிறேன். இதை ஓர் அனுபவமாக உணர வைத்திருக்கிறேன். ஆனால் இதை புதுசு என்று சொல்லமாட்டேன். என்கிறார்.


கதை பற்றி இயக்குநர் கூறும் போது, எல்லா சொற்களும் சொல்லப்பட்டுவிட்டன. சொல்கிற வாய்கள் வேறு வேறு என்பார்கள். இந்த உலகத்தில் புதுசு என்று ஒன்றும் கிடையாது. அதற்கான மூலம் என்றைக்கோ உருவாகியிருக்கும். அது மட்டுமல்ல இந்த மறதி என்று ஒன்று இருக்கும்வரை எல்லாமே புதிதாகத் தெரியும் என்று நினைப்பவன் நான். கோணங்களை வித்தியாசப்படுத்தி கதை சொல்லியிருக்கிறேன். உணர்வுகளையும் நிகழ்வுகளையும் பற்றி மட்டுமே பேசும் யதார்த்தமான படம்தான் ரீங்காரம் "என்கிறார்.


படத்தில் நடித்த நடிகர்கள் பற்றிக் கூறும் போது, "ஒவ்வொருவரும் இயல்பு மீறாமல் யதார்த்தம் கெடாமல் நடித்திருக்கிறார்கள். கதாநாயகனாக புதுமுகம் பாலா. அவர் வேலையை சரியாக செய்து யதார்த்தத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். தூக்க முடியாத பாத்திரத்தைக் கூட தூக்கிட்டு நடந்திடலாம் ஆனால் கதாபாத்திரத்தை தூக்கிட்டு நடக்கிறது சுலபமல்ல. பாரத்தை முகத்தில் காட்டாமல் பாத்திரத்தை சுமந்து வாழ்ந்திருக்கிறார் கதாநாயகிகங்காரு பிரியங்கா. கங்காரு பிரியங்கா இனி ரீங்காரம் பிரியங்கா ஆகிவிடுவார். எப்போதுமே எரியும் நெருப்பாக கலாபவன் மணி .அடக்கமாக நடித்து ஆளுமை காட்டியுள்ளார். குத்திக் கிழிக்கிற கத்தி மாதிரி ஆடுகளம் ஜெயபாலன். பசங்க சிந்தியா அம்மாவாக உயிர் கொடுத்துள்ளார்.என்கிறார் . இதுவரை 25 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார்கள்.தமிழ் ரசிகர்கள் என்றும் புதுமையை ரசிப்பவர்கள். புதிய கதை சொல்லிகளை ஆராதிப்பவர்கள் ரீங்காரத்தையும் வரவேற்பார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in