ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் ஓர் அறிமுக இயக்குனராக 2005ல் மம்முட்டியை வைத்து இயக்கிய 'ராஜமாணிக்கம்' என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் மற்ற அந்த சமயத்தில் முன்னணி நடிகர்களையும், ஏன் இயக்குனர்களையும் கூட வாய்பிளக்க வைத்தது. இன்றும் கூட விஷேச தினங்களில் ஒரு குறிப்பிட்ட சேனல் மட்டும் நம்ம ஊரில் 'பாட்ஷா'வை களம் இறக்குவது மாதிரி அங்கே 'ராஜமாணிக்கம்' படத்தை தான் ஒன்மேன் ஆர்மியாக களம் இறக்கிவருகிறது. இந்த சூப்பர்ஹிட் படத்தில் ஹீரோவான மம்முட்டிக்கு வலதுகையாக முக்கியமான ரோலில் நடித்து அப்ளாஸ் அள்ளினார் ரகுமான்.
ஆனால் இந்த கேரக்டரில் நடிக்க ரகுமான் முதலில் ஒப்புக்கொள்ளவில்லையாம். அதன் பின்னணியும் சுவராஸ்யமானது. 1987லிலேயே நடிக்க வந்த நடிகர் ரகுமான், மலையாளத்திலும் தமிழிலும் மாறிமாறி கதாநாயகனாக நடித்துவந்தார். கிட்டத்தட்ட பத்து வருட ஓட்டத்திற்குப்பின் தொண்ணூறுகளின் இறுதிவரை கதாநாயகனாக தாக்குப்பிடித்தவருக்கு, அடுத்து குணச்சித்திர நடிகராக மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில் தான் எந்த முடிவெடுக்கலாம் என்கிற குழப்பமும் ரகுமானுக்கு ஏற்பட்டது.