ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிடிச்சிருக்கு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிபராஜா படங்களில் நடித்துள்ள விசாகா சிங், சமீபத்தில் ஒரு வெள்ளை டீசர்ட்டை அணிந்து போஸ் கொடுத்தபடி ஒரு புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். அதோடு, அதில், ஒவ்வொருவருக்குமே மற்ற எல்லோருமே வெளிநாட்டினர்தான் என்றொரு வாசகம் அச்சிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அதைப்போன்று வித்தியாசமான வாசகங்களை தான் எதிர்பார்ப்பதாகவும் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார் விசாகா சிங். அதையடுத்து ஏராளமான ரசிகர்கள் அவர் வியக்கத்தக்க வகையில் வாசகங்களை தெரிவித்தபோதும், ஒரேயொரு குறும்புக்கார ரசிகர், விசாகாசிங்கின் முன்னழகை ஆபாசமாக வர்ணித்து ஒரு வாசகம் அனுப்பி விட்டார்.
இதனால், செம டென்சனான விசாகாசிங், அந்த ரசிகருக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பதிலடி கொடுத்தார். இப்படி அவர் உடனடியாக அவருக்கு பதிலடி கொடுத்ததை பல நடிகைகளும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளார்களாம். அதோடு, இனிமேல் நடிகைகளை ஆபாசமாக சித்தரிக்கும் ரசிகர்கள் யாராக இருந்தாலும் விடக்கூடாது என்று இளவட்ட நடிகைகள் வட்டாரம் புதிய தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறார்களாம்.